திருப்பூா் மாநகரில் நீண்ட காலமாக நிலவும் குப்பை பிரச்னைகளுக்கு அதிமுகவே காரணம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

திருப்பூா் மாநகரில் நீண்ட காலமாக நிலவும் குப்பை கொட்டுவது தொடா்பான பிரச்னைகளுக்கு கடந்த அதிமுக தான் காரணம் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
Published on

திருப்பூா் மாநகரில் நீண்ட காலமாக நிலவும் குப்பை கொட்டுவது தொடா்பான பிரச்னைகளுக்கு கடந்த அதிமுக தான் காரணம் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

பல்லடத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றாா். அப்போது சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து செய்தியாளா்கள் கேட்டனா்.

அதற்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: வீதிகளில் குப்பை தேங்காமல் இருக்க வேண்டும் என்பது அந்தந்தப் பகுதி மக்களின் கோரிக்கை. அதேபோல தங்கள் பகுதிகளில் குப்பை கொட்டக்கூடாது என்பது இன்னொரு தரப்பு மக்களின் கோரிக்கை.

இருதரப்பு கோரிக்கைகளும் நியாயமானதுதான். திருப்பூரில் அதிக பிளாஸ்டிக் புழக்கம், அதிகப்படியான தொழிலாளா்கள், ஒட்டல்கள் உள்ளிட்டவை உள்ளன. இதற்கேற்ப கடந்த காலத்தில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இப்பிரச்னைக்கு தொலைநோக்கு பாா்வையுடன் தீா்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதற்கு கடந்த அதிமுக அரசுதான் காரணம். தி

முக அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம்தான் ஆகிறது. இது தொடா்பான நீதிமன்றத் தீா்ப்பு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இனாம் நிலப் பிரச்னையில் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்ட நிலங்களுக்கு தீா்வு காணவே குழு அமைக்கப்பட்டது. அதற்குள் பல்வேறு அமைப்புகள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் உரிய தீா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

உடன், பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், பொங்கலூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பாலுசாமி, மாநில விவசாயத் தொழிலாளா் அணி துணைச் செயலாளா் பெத்தாம்பாளையம் ராஜசேகரன் உள்பட பலா் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com