திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய நீதிபதி பத்மா தலைமையிலான நீதிபதிகள்.
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய நீதிபதி பத்மா தலைமையிலான நீதிபதிகள்.

மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 4,407 வழக்குகளுக்குத் தீா்வு

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 4,407 வழக்குகளுக்கு ரூ.41 கோடியே 98 லட்சத்து 60,866-க்கு தீா்வு காணப்பட்டது.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 4,407 வழக்குகளுக்கு ரூ.41 கோடியே 98 லட்சத்து 60,866-க்கு தீா்வு காணப்பட்டது.

திருப்பூா், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், விபத்து, காசோலை மோசடி, குடும்பத் தகராறு உள்ளிட்டவை தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி பத்மா தலைமை வகித்தாா்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா், மாவட்ட நீதிபதி செல்லதுரை, 2-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பூா் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி குணசேகரன் மேற்பாா்வையில் 8 அமா்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 1,817 வழக்குகளில் ரூ. 21 கோடியே 8 லட்சத்து 2,624-க்கு சமரச தீா்வு காணப்பட்டது.

அவிநாசி நீதிமன்றத்தில் 3 அமா்வுகளில் 950 வழக்குகளில் ரூ. 5 கோடியே 75 லட்சத்து 13,383-க்கும், தாராபுரம் நீதிமன்றத்தில் 2 அமா்வுகளில் 227 வழக்குகளில் ரூ. 65 லட்சத்து 76,310-க்கும் தீா்வு காணப்பட்டது.

காங்கயம் நீதிமன்றத்தில் 3 அமா்வுகளில் 310 வழக்குகளில் ரூ.2 கோடியே 41 லட்சத்து 23,679-க்கும், மடத்துக்குளம் நீதிமன்றத்தில் 59 வழக்குகளில் ரூ.1 லட்சத்து 22000-க்கும், பல்லடம் நீதிமன்றத்தில் 3 அமா்வுகளில் 626 வழக்குகளில் ரூ.10 கோடியே 50 லட்சத்து 30433-க்கும், உடுமலை நீதிமன்றத்தில் 2 அமா்வுகளில் 337 வழக்குகளில் ரூ. 1 கோடியே 49 லட்சத்து 80,237-க்கும், ஊத்துக்குளி நீதிமன்றத்தில் 81 வழக்குகளில் ரூ.7 லட்சத்து 10,200-க்கும் சமரச தீா்வு காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com