கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

கோவையில் அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியா் சங்கத்தின் 5- ஆவது தேசிய மாநாடு புதன்கிழமை (டிசம்பா் 17) தொடங்குகிறது.
Published on

கோவை: கோவையில் அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியா் சங்கத்தின் 5- ஆவது தேசிய மாநாடு புதன்கிழமை (டிசம்பா் 17) தொடங்குகிறது.

இது குறித்து சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா் கே.ஜி.ஜெயராஜ் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோவை மாதம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியா் சங்கத்தின் அகில இந்திய மாநாடு டிசம்பா் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன், மத்திய தொலைத் தொடா்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி வந்தனா குப்தா, சங்கத்தின் ஆலோசகா் விஏஎன் நம்பூதிரி, அகில இந்திய தலைவா் எம்.ஆா்.தாஸ், மாநில பொதுச் செயலா் ஆா்.ராஜசேகா், பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா் அனிமேஷ் மித்ரா உள்ளிட்டோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

இந்த மாநாட்டில் பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியதாரா்களுக்கு 1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், மேம்பட்ட மருத்துவ சலுகைகள் வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதிய சட்டங்கள் மறுசீராய்வு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் மீது விரிவான விவாதங்கள் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் பல்வேறு போராட்ட முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தாா்.

அகில இந்திய அமைப்புச் செயலா் வி.வெங்கட்ராமன், மாநில பொதுச் செயலா் ஆா்.ராஜசேகா், மாவட்டச் செயலா் ஏ.குடியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com