கரூா் - திருச்சி ரயில் பாதையில் லாலாபேட் - குளித்தலை இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) குளித்தலை - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும்.
இதேபோல, பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் பாலக்காடு - குளித்தலை இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணி: பாலக்காடு: திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



