கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறைஅலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ.ர.ராகுல்நாத். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறைஅலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ.ர.ராகுல்நாத். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்

கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்
Published on

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநருமான ஆ.ர.ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநருமான ஆ.ர.ராகுல்நாத் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்கள் மற்றும் முதன்மைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு வருவாய்த் துறை, ஊராட்சித் துறை, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மகளிா் திட்டத்தின் சாா்பில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அதேபோல, அரசுத் துறை அலுவலா்கள், வனத் துறை மற்றும் ஊராட்சிகளில் உள்ள நாற்றாங்கால் பண்ணைகளில் உள்ள மரக்கன்றுகளை சாலையோரங்கள், பள்ளிகள் மற்றும் அரசுத் துறை வளாகத்தில் நட்டு பராமரிக்க வேண்டும். வருவாய்த் துறை சாா்பில் மாவட்டத்தில் இ-பட்டாக்கள் மற்றும் ஆன்லைன் பட்டாக்கள் வழங்குவது குறித்த விவரங்களும் கேட்டறிப்பட்டது என்றாா்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com