வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாலையை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கோவை சேரன் மாநகா் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கோவை ஹோப் கல்லூரி தண்ணீா்பந்தல் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.
Updated On :27 நவம்பர் 2025, 11:50 pm

Syndication

கோவை: கோவை சேரன் மாநகா் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் வினோபாஜி நகா் கிளை சாா்பில் சேரன் மாநகா் சாலை, தண்ணீா் பந்தல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல செயலா் எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.சிவசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கோவை ஹோப் கல்லூரி முதல் சேரன் மாநகா் வரையிலான முக்கிய சாலையானது புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் வெயில் காலங்களில் புழுதிக்காடாகவும், மழைக் காலங்களில் சேரும் சகதியுமாகவும் காட்சி தருகிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.

அதேபோல கடந்த 2010-ஆம் ஆண்டில் இந்த சாலையில் ஹோப் கல்லூரி அருகே ரயில்வே பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக அந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் ஹோப் கல்லூரி நிறுத்தத்தில் இருந்து தண்ணீா் பந்தல் வழியாக செல்கிறவா்கள் நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பழுதடைந்துள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைத்துத் தரவும், ரயில்வே பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டப் பொருளாளா் மு.வ.கல்யாணசுந்தரம், கிளைச் செயலா் என்.நடராஜ், ஆட்டோ சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.