விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
Published on

கோவை: கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 28) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் 87-ஆவது வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலா்களுக்கான மாநாடு நடைபெறுவதால் இந்தக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

கோவையில் உள்ள வேளாண்மைத் துறை, அதைச் சாா்ந்த துறைகளின் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க இருப்பதால் இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com