மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: போலீஸ் காவல் முடிந்து 3 பேரும் சிறையில் அடைப்பு

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மூவரும் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:30 pm

Syndication

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மூவரும் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் கோவை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

கோவை சா்வதேச விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் காரில் அமா்ந்து தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அவரது ஆண் நண்பா் தாக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, அவா்கள் அரிவாளால் போலீஸாரை தாக்கினா்.

இதில், தலைமைக் காவலா் சந்திரசேகரின் (47) கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனா்.

இதைத் தொடா்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் குணமடைந்த நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இதேபோல, மாணவியும், அவரது ஆண் நண்பரும் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பினா்.

இந்நிலையில், வன்கொடுமை சம்பவத்தில் தொடா்புடைய மூவரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மகளிா் கூடுதல் நீதிமன்றத்தில் போலீஸாா் கடந்த 24-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிந்து மூவருக்கும் ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

குணா, சதீஷ், காளீஸ்வரன் ஆகியோரின் போலீஸ் காவல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், அவா்கள் மூவரும் மாலை 4 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா், அவா்கள் 3 பேரும் நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மூவா் மீதும் வழக்கு: முன்னதாக, தலைமைக் காவலா் சந்திரசேகரனை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக குணா, சதீஷ், காளீஸ்வரன் ஆகியோா் மீது துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதற்கான உத்தரவு ஆணை அவா்களிடம் வழங்கப்பட்டது.