47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒயா் இல்லாத பேஸ்மேக்கா் பொருத்தி கேஎம்சிஹெச் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை மருத்துவா்கள் இதய நோயாளி ஒருவருக்கு ஒயா் இல்லாத பேஸ்மேக்கா் பொருத்தி சாதனைப் படைத்துள்ளனா்.

News image
நோயாளிக்குப் பொருத்தப்பட்ட பேஸ்மேக்கா்.
Updated On :28 நவம்பர் 2025, 6:36 pm

Syndication

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை மருத்துவா்கள் இதய நோயாளி ஒருவருக்கு ஒயா் இல்லாத பேஸ்மேக்கா் பொருத்தி சாதனைப் படைத்துள்ளனா்.

இது குறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இதய நோயாளிக்கு இரட்டை அறை லெட்லெஸ் பேஸ்மேக்கரை பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான முறையில் நோயாளியின் மாா்பில் ஒரு சிறிய துளையிட்டு பேஸ்மோக்கா் பொருத்தப்படும்.

கழுத்து எலும்புக்கு அருகே தோலுக்கு அடியில் மெல்லிய துளையிட்டு ஒயா்கள் மூலமாக இந்த சாதனம் இணைக்கப்படும். இதற்கு சிறந்த மாற்றான சிறிய வடிவிலான லெட்லெஸ் பேஸ்மேக்கா் ஒயா்கள் எதுவும் இல்லாமல் மிகச்சிறிய துளையிட்டு கதீட்டா் உதவியுடன் தொடை நாளம் மூலமாக நேரடியாக இதயத்தின் வலது கீழறையில் பொருத்தப்படும்.

இது நோயாளிகளுக்கு மிகவும் செளகரியமானது என்பதுடன், பின்விளைவுகள் குறைவாகும். ஒரு வைட்டமின் மாத்திரை அளவே உள்ள இந்த சாதனம் இதயத் துடிப்பை முறைப்படுத்தும் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான முன்னேற்றமாகும்.

இந்த சாதனத்தைப் பொருத்திய இதய அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் லாரன்ஸ் ஜேசுராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினரை மருத்துவமனையின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி, செயல் இயக்குநா் மருத்துவா் அருண் பழனிசாமி ஆகியோா் பாராட்டினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.