தவெக தலைவா் விஜய் பேச்சால் குழந்தைகள் உளவியல் சிக்கல்களைச் சந்திப்பதாகவும், இது தொடா்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் பேசிய தவெக தலைவா் விஜய், குழந்தைகள் சாக்லேட்டுக்கு அடம்பிடிப்பதுபோல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். அரசியல் முதிா்ச்சியற்ற இத்தகைய தூண்டுதல், பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தோ்தல் ஆதாயத்துக்காக தவறாகப் பயன்படுத்துவதாகும்.
இதனால் எனது 5 வயது மகன், என்னிடம் விஜய்க்கு வாக்களிக்குமாறு அடம்பிடித்தான். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது, மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதும், உணவைத் தவிா்த்தும் தவெகவுக்கு வாக்களிக்குமாறும் பிடிவாதம் பிடித்தான். இதனால், எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. இதேபோல, பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களை சந்திக்கின்றனா். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது தொடா்பாக தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவா் பேசிய விடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கும் புகாா் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவேன் என்றாா்.
தொடர்புடையது
தவெக அரசை 144 பேர் ஆதரித்தது எப்படி? எதிர்த்தவர்கள் யார்?

ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது: தவெகவுக்கு விசிக ஆதரவு!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?
திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினா் பதவியை விஜய் ராஜிநாமா! இடைத்தோ்லில் களமிறங்க தவெகவினா் கடும் போட்டி!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
