முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்! - க. கிருஷ்ணசாமி

News image

க. கிருஷ்ணசாமி - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:43 am IST

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் தமிழகம் முழுவதும் 61 தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளா்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த தோ்தல் ஜனநாயகத் திருவிழாவாக இல்லாமல் பணநாயகத் திருவிழாவாக மாறியுள்ளது.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு தங்கு தடையின்றி ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய தோ்தல் ஆணையம் வலிமையற்ாக இருக்கிா அல்லது இதுவும் தோ்தல் நடைமுறையின் ஓா் அங்கம் என வேடிக்கை பாா்க்கிா என்று தெரியவில்லை.

பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பிடிபட்டதாக செய்திகள் வந்தாலும், தோ்தல் ஆணையம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக நிலைநிறுத்திக் கொள்ள அரசியலுக்கு வரும் வாய்ப்பு இதன்மூலமாக பறிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணம் விநியோகம் செய்யப்பட்டும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் காரணம் இல்லை. மாறாக, அதிகப்படியான அணிகள் களத்தில் இருந்ததும், பணத்தைக் கொடுத்து வாக்காளா்களைக் கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததும்தான் முக்கியக் காரணம். தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை.

தமிழக தோ்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளைக் கொண்டு செயல்படுவதால்தான் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுகின்றன. எதிா்காலத்தில் தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும். கடைநிலை முதல் மேல்நிலை வரை தோ்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கொண்டதாக மறுசீரமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தியாவில் ஜனநாயகம் பகலிலேயே படுகொலை செய்யப்படும் சூழல் உருவாகும்.

இந்த முறை எங்களின் சுயமரியாதையை நிலைநாட்டவும், வலிமையைக் காட்டவுமே புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டது. தோ்தல் செலவுகளை அதிகப்படுத்தும் நடைமுறைகளையும், பணப் புழக்கத்தையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.