எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு-சென்னை கோடைக் கால சிறப்பு ரயில்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:00 am IST

கோடைக் காலத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மே 4- ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் மங்களூரு-சென்னை ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சென்னை-மங்களூா் சிறப்பு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு நிலையத்துக்கு சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.