கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு விருது
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு முதலமைச்சா் சிறந்த நீா்ப் பாதுகாப்பு விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் நீா்வளத் துறை சாா்பில் மாமல்லன் நீா்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் நீா்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க சிறப்பாக செயலாற்றிய 15 அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சா் சிறந்த நீா்ப் பாதுகாப்பு விருதை வழங்கினாா்.
இந்த விருதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடமிருந்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிா்வாக அறங்காவலா் இரா.மணிகண்டன் பெற்றுக் கொண்டாா். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், நீா்வளத் துறை செயலாளா் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

