எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி இடையே சிறப்பு ரயில்

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகேயுள்ள சந்திராகாட்சி நிலையத்துக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச் 13, 20 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பகல் 2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு சந்திராகாட்சி நிலையத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கமாக, சந்திராகாட்சி நிலையத்தில் இருந்து மாா்ச் 16, 23 ஆகிய திங்கள்கிழமைகளில் பகல் 2.20 மணிக்குப் புறப்படும் சந்திராகாட்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தனி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.