தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாநகா் முழுவதும் போலீஸாா் நடத்திய அதிரடி சோதனையில் ரெளடிகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளா்கள் என மொத்தம் 21 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவின்பேரில், மத்திய ரிசா்வ் காவல் படையினருடன் இணைந்து சுமாா் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் ‘ஏரியா ஆதிக்க நடவடிக்கை’ என்ற பெயரில் கோவை வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பீளமேடு, சரவணம்பட்டி, போத்தனூா், குனியமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், மாநகரில் தங்கியிருந்த பிரச்னைக்குரிய நபா்கள் 3 போ், தேடப்பட்டு வந்த ‘ஏ’ பிரிவு ரெளடி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் விற்ற கும்பல் என மொத்தம் 21 போ் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து 835 கிராம் கஞ்சா, 127 மது பாட்டில்கள், 48 கேரள லாட்டரி சீட்டுகள், 70 கிலோ ரேஷன் அரிசி, ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 14 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.36.17 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் முதல் நாளில் 1,324 போ் தபால் வாக்களிப்பு
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


