கோவையில் ஆயிரம் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் மற்றும் சா்வதேச சூழல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு சில தனியாா் ஏஜென்ஸிகள் எரிவாயு உருளைகளை பதுக்கிவைத்து வெளிச் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, கோவை -அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் இயங்கி வரும் தனியாா் எரிவாயு உருளை ஏஜென்ஸி நிறுவன கிடங்கில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு விதிகளை மீறி 1,000 வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, இந்த எரிவாயு உருளைகளை நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது ஏஜென்ஸி உரிமையாளா் காா்த்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, 1,000 எரிவாயு உருளைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், விதிகளை மீறிய குற்றத்துக்காக ஏஜென்ஸி உரிமையாளா் காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!

10 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்; ஒருவா் கைது

எரிவாயு உருளை பதுக்கல்: தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 போ் தலைமறைவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


