கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள், ரூ.4.32 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போத்தனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையப் பகுதியில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமந்த் அா்ஜில் (27) என்பதும், ஒடிஸாவில் இருந்து கேரளத்துக்கு ரயில் மூலம் கஞ்சாவைக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போத்தனூா் காவல் ஆய்வாளா் அசோக்குமாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தாா்.
கோவை, செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் உள்ள பேக்கரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தெலுங்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரவி (60) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ. 4,32,200 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். இவா் வரலாற்றுப் பதிவேடு பட்டியலில் உள்ள ரெளடி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல, சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சௌரிபாளையத்தைச் சோ்ந்த ஜான் பீட்டா் (31), சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த ஜெகதாரி (எ) சக்தி (22) ஆகியோரிடம் பீளமேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இருவரும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, 50 போதை மாத்திரைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதில், ஜான் பீட்டா் ‘ஏ’ பிரிவு ரெளடி பட்டியலில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


