குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனதலைவராக எம்.ஆர்.சுப்பையன் பொறுப்பேற்பு

கோவை துடியலூரில் உள்ள தமிழ்நாட்டின் முதன்மை கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடந்தது.

Updated On :12 மே 2013, 5:41 am IST

கோவை துடியலூரில் உள்ள தமிழ்நாட்டின் முதன்மை கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சியில், சிவகுமார் வரவேற்றார்.

தலைவராக எம்.ஆர்.சுப்பையன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து துணைத் தலைவராக ஆர்.செல்வராஜன், நிர்வாக இயகுநர்களாக சூரியா ராமசாமி, யு.ஆர்.கிருஷ்ணன், சிவகுமார், தாமோதரன், ஜெகநாதன், சந்திரகலா, ராஜேஸ்வரி, தனலட்சுமி, அனுசுயா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமி கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.

முன்னாள் தலைவர் துரைசாமி, வங்கி செயலாளர் அமராவதி, கே.பி.ராஜ், பேரூராட்சித் தலைவர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.வி.என்.ஜெயராமன், ஆனந்தன், சேர்மன் வீரபாண்டி விஜயன், ஊராட்சித் தலைவர்கள் சரவணகுமார், இராமகிருஷ்ணன், ரவி, டி.என்.வேலுச்சாமி, உஷாமாலு, வி.கே.வி.சுந்தர்ராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அப்பையன், பூக்கடை ரவிச்சந்திரன், குருந்தாசலம், ரகுநாதன், பொ.சண்முகம், ரங்கராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கவிச்சந்திரமோகன், அன்னபூரணி, முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி, மாணிக்கம், முன்னாள் இயக்குநர் தங்கவேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.