கேரள மாநிலவாழ் தமிழ் மாணவர்களுக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இடஒதுக்கீடு கண்துடைப்பாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, சென்னை மாகாணத்தில் இருந்த பாலக்காடு கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்டது. ÷தமிழர்கள் அதிகம் இருந்தும் பாலக்காடு மாவட்டம் கேரளத்துடன் சேர்க்கப்பட்டது. அன்றுமுதல் பாலக்காடு மாவட்டத்தில் வசிக்கும் கேரள வாழ் தமிழர்கள் அம்மாநில அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அங்குள்ள தமிழர்கள் புகார் கூறி வருகின்றனர்.
÷இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் செயல்படும் இரண்டு அரசு கல்லூரிகளில், தமிழ் பேசும் மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கேரள அரசு முன்வந்தது.
÷பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு கோழிக்கோடு அரசு பல்கலைக்கழகம், சித்துôர் அரசுக் கல்லூரியில் 5 சதவீத இடஒதுக்கீடும், கொழிஞ்சாம்பாறை அரசு கல்லூரியில் 10 சதவீத இட ஒதுக்கீடும் அறிவித்தது. ÷ஒவ்வோர் ஆண்டும் இந்த இடஒதுக்கீட்டிற்கான அனுமதியை இரு கல்லூரிகளுக்கும் கோழிக்கோடு அரசு பல்கலைக்கழகம் வழங்கிவருகிறது.
தற்போது, நடப்புக் கல்வியாண்டில் சித்துôர் அரசு கல்லூரியில் 5 சதவீத இடஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கல்லூரியில் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், கொழிஞ்சாம்பாறை அரசு கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
÷இக்கல்லூரிக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை இதுவரை வழங்காததே இதற்கு காரணம்.
வரும் 14-ஆம் தேதி பொது சேர்க்கை நடைபெற உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுமதி கல்லூரிக்கு வழங்கப்படாததால், தமிழ் ஏழை மாணவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
÷இதனால் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, தமிழகத்திலுள்ள தனியார் கல்லூரிகளிலும் சேர்ந்துவருகின்றனர்.
÷இதுபற்றி அஸ்திரா சமூக அமைப்பின் நிர்வாகி சரவணன் கூறியதாவது:
÷கடந்த சில ஆண்டுகளாக கோழிக்கோடு பல்கலைக்கழகம் மொழிச் சிறுபான்மை இட ஒதுக்கீட்டுக்கான அனுமதியை கொழிஞ்சாம்பாறை கல்லூரிக்கு தாமதமாகவே வழங்கிவருகிறது. இதன்காரணமாக, தமிழ் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துவிடுகின்றனர்.
÷பொது இடங்களில் மாணவர்கள் சேர்ந்தபிறகு மொழிச்சிறுபான்மை இட ஒதுக்கீட்டை அறிவிப்பதால் தமிழ் மாணவர்கள் அதைப் பயன்படுத்த முடிவதில்லை என்றார்.
÷கொழிஞ்சாம்பாறை அரசு கல்லூரி கண்காணிப்பாளர் ரகுநாதன் கூறுகையில், கோழிக்கோடு அரசு பல்கலைக்கழகத்தில் இருந்து இதுவரை தமிழ்மொழிச்சிறுபான்மை மாணவர்கள் பட்டியல் வரவில்லை. மாணவர்கள் பட்டியல் வந்தபிறகு சேர்க்கை நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

