கோவையில் அதிகரிக்கும் பெண் வன்கொடுமை குற்றங்கள்!
கோவையில் கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 40 பாலியல் வன்கொடுமை


கோவையில் கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 40 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் குற்றங்களுக்கு பெரும்பாலும் மதுபழக்கமும், ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கமும் காரணமாக இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் 20 பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. 2013ஆம் ஆண்டில் 17 பாலியல் வன்கொடுமைகள், நடப்பாண்டில் இதுவரை 3 பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்துள்ளன.
அதே நேரத்தில் பொது இடங்களில் பெண்களை கேலி செய்தல், பணி செய்யும் இடங்களில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் 138 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
இவற்றோடு ஒப்பிடுகையில், கணவர் மற்றும் உறவினர்களின் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் அளித்த புகார்கள் எண்ணிக்கை அதிகப்படியாக உள்ளது. கடந்த 2012ல் இதன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 112. அதே 2013லிருந்து இதுநாள் வரை 63 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை தவிர பெண்கள் கடத்தல் வழக்குகள், வரதட்சணை கொடுமை வழக்குகளும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மீது சமூகத்தில் தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதல்களுக்கு மதுபழக்கமும், கலாசார சீரழிவும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இதுகுறித்து கோவை பெண்கள் வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர் வெண்ணிலாவிடம் கேட்டபோது, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடுக்க முக்கியக் காரணம் மதுஅருந்தும் பழக்கம். தவிர கலாசார சீரழிவும் இதற்கு மற்றொரு முக்கியக் காரணமாக உள்ளது. கலாசார சீரழிவு என்பது பெண்கள் பொது இடங்களில் அணியும் ஆடை, குறைந்து வரும் நமது கூட்டு குடும்ப வாழ்க்கை முறைகள், மக்களின் வாழ்க்கை சூழல், பழக்க வழக்கங்கள் என பல வகைகளில் உள்ளன.
அதோடு இருபாலரும் தற்போது வேலைக்கு செல்லும் சூழலில் உள்ளனர். இதனால் பெண்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ஆண்களுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் கணவருக்கு சந்தேகம் ஏற்படுதல், தம்பதிகளுக்குள் சகிப்புத் தன்மை இல்லாமல் போவது, பெண்களுக்கும் சமூகம் சார்ந்த பயம் இல்லாமல் போவது, சுயநலம், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுதல் போன்றவை பெண்கள் மீதான குற்றங்களுக்கு வழிகோலாக அமைகின்றன.
சினிமாக்களில் பேசப்படும் வசனங்கள் மற்றும் அமைக்கப்படும் காட்சிகள், பள்ளி மாணவ, மாணவியர் உள்பட அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் ஆபாச படங்களும் இது போன்ற குற்றங்களுக்கு வித்தாக அமைகின்றன. சமீபத்தில் சென்னையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆபாச படங்களே முக்கிய தூண்டுதலாக இருந்துள்ளன. அரசுதான் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...