நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

வால்பாறை அருகே 15 கிலோ சந்தனக் கட்டை பறிமுதல்

சந்தனக் கட்டை திருட்டு கும்பல் தப்பியோடிய நிலையில், 15 கிலோ சந்தனக் கட்டையை வனத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Updated On :

சந்தனக் கட்டை திருட்டு கும்பல் தப்பியோடிய நிலையில், 15 கிலோ சந்தனக் கட்டையை வனத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

வால்பாறை வனச்சரக அலுவலர் சரவணன் உத்தரவின்பேரில் வனவர் சந்திரன் தலைமையில் வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டகட்டி வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,  திங்கள்கிழமை அதிகாலை அட்டகட்டி மின் வாரியப் பணியாளர்கள் குடியிருப்பு அருகில் மரம் வெட்டும் சத்தம் கேட்டு, வனத் துறையினர் அங்கு சென்றபோது, அவர்களைப் பார்த்த 4 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தன மரத்தை வெட்டி, அதிலிருந்து 15 கிலோ சந்தனகட்டையைச் செதுக்கி, அதை கடத்திச் செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை வனத்துறையினர் கைப்பற்றினர். சந்தனக் கட்டை திருட்டுக் கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.