ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கேபிஆர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சூலூர் அருகேயுள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் கோவை கிரீணோடெக் சொல்யூஷன், சென்னையைச் சேர்ந்த டேட்டா டாட்ஸ் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Updated On :

சூலூர் அருகேயுள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் கோவை கிரீணோடெக் சொல்யூஷன், சென்னையைச் சேர்ந்த டேட்டா டாட்ஸ் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 கல்லூரியில் நடைபெற்ற இதற்கான விழாவிற்கு கல்லூரி முதல்வர் கே.பொம்மண்ண ராஜா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் என்.யுவராஜா வரவேற்றார். கல்லூரியின் மனிதவள மேப்பாட்டுத் துறை மேலாளர் பாலாஜி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

இதில், கோவையைச் சேர்ந்த கிரீணோ டெக் சொல்யூஷன் நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி எஸ்.பி.செல்வகுமார், மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் கபிலன் சக்கரவர்த்தி, சென்னை டேட்டா டாட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் எஸ்.பி.கெளதம் உள்ளிட்டோர் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக மாணவர்கள் நேரடியாக இந்நிறுவனங்களில் பயிற்சி பெற முடியும்.  கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.