நான்கு வழிச்சாலையாக மாற்ற பெ.நா.பாளையத்தில் ஆய்வு
பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வடகோவையிலிருந்து- தெற்குப்பாளையம் பிரிவு வரை உள்ள சாலை நான்கு வழிச் சாலையாக அண்மையில் மாற்றப்பட்டது. தற்போது தெற்குப்பாளையம் பிரிவிலிருந்து மேட்டுப்பாளையம் வரை இருவழிச் சாலையாக உள்ள இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் இச்சாலையின் போக்குவரத்து பயன்பாடு, கட்டமைப்பு வசதிகள், மரங்களை அகற்றுதல், பாலங்கள் அமைப்பது ஆகியவை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்தறை உதவிக் கோட்டப் பொறியாளர் எஸ்.குழந்தைராஜ் தலைமையில் உதவிப் பொறியாளர் வி.பி.ஜெயப்பிரகாஷ் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட வித்யாலய ஐடிஐ மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் அடிப்படையில் பெறப்படும் தகவல்கள், மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் நான்கு வழிச்சாலைக்கான பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

