பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

குளத்தில் கட்டடக் கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு

குறிச்சி குளத்தில் கட்டடக் கழிவுகளை கொட்டியதாக மாநகராட்சி ஒப்பந்ததாரர் வாகனத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

குறிச்சி குளத்தில் கட்டடக் கழிவுகளை கொட்டியதாக மாநகராட்சி ஒப்பந்ததாரர் வாகனத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனர்.

 கோவை குறிச்சிக் குளம் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக்  குளத்தின் நீர் வழித்தடங்கள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தற்போது குளம்  வறண்டு கிடக்கிறது. இந்தக் குளத்தை மூடி பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இக்குளத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர், வாகனம் மூலம் கட்டடக் கழிவுகளைக் கொட்டியுள்ளார்.

 அதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், இந்த வாகனத்தை சிறைபிடித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொதுப் பணித் துறை அதிகாரிகள், குளத்தில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தெரிவித்தனர்.

கட்டடக் கழிவுகளை அப்புறப்படுத்துவதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இக்குளத்தை மூடுவதற்காகவே திட்டமிட்டு இங்கு கழிவுகள் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.