வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு சேவை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொள்ளாச்சி எம்.பி. சி. மகேந்திரனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். இதேபோல், எஸ்டேட்களில் தற்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கோவை சென்று ரயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். முன்பதிவு இன்றி நேரடியாக ரயில் நிலையம் சென்று பயணம் மேற்கொள்வதால், இருக்கை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு சேவையைத் தொடங்கஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.