கே.பி.ஆர். கல்லூரியில் தென்னிந்திய பல்கலை.இடையிலான செஸ் போட்டி

சூலூர் அருகே, அரசூரில் உள்ள கே.பி.ஆர்.தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரியில் தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

சூலூர் அருகே, அரசூரில் உள்ள கே.பி.ஆர்.தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரியில் தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதில்,  74 பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டன. வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் 54 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பங்கேற்றனர்.
இப்போட்டியின் தொடக்கவிழா, கே.பி.ஆர்.கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரித் தலைவர் கே.பி.ராமசாமி, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத் துறை குழுத் தலைவர் செல்லதுரை, செயலாளர் செளந்திரராஜன், கல்லூரி முதல்வர் பொம்மன்னராஜா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர். கல்லூரியின் விளையாட்டுத் துறை இயக்குநர் தம்பிதுரை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
ஏழு சுற்றுகளாக நான்கு நாள்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் அதிக புள்ளிகள் எடுக்கும் அணியினர் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெறுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com