ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பட்டறை

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை தொடங்கியது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:51 am IST

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை தொடங்கியது.
   அறிவியல், பொறியியல், கணிதப் பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாகக் கற்றுக் கொடுப்பது தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறைக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டெம் அகாதெமி ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.  இதன் தொடக்க விழா ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
   விழாவுக்கு கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், ஸ்டெம் அகாதெமி முதன்மைப் பயிற்சியாளர் பேடி சர்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
     தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலைக்குச் செல்லக் கூடிய அளவுக்கு திறனை வளர்ப்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. போட்டித் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி தரமான ஆசிரியர்களை நியமித்து கல்வித் தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக தர வரிசைப் பட்டியல் முறை அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 இடங்களில் காட்சிக்கூடங்கள் அமைக்கவும், மதுரையில் பெரிய நூலகம் அமைக்கவும், மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சிக் கூடங்கள் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகளை மையப்படுத்தி கற்றலில் மாற்றங்கள் கொண்டு வரவும் அதன் மூலம் தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்கவும் முயற்சித்து வருகிறோம் என்றார்.
   அமெரிக்காவைச் சேர்ந்த பயிற்றுநர்கள் கனியா கீரிர், லிஸா ஸ்டீவ், வாய்னே நியூபெரி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தனர். கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.