முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கால் நரம்பு வீக்க சிகிச்சை முகாம்

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால் நரம்பு வீக்க சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:22 am IST

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால் நரம்பு வீக்க சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
வெரிகோஸ் வெயின் எனப்படும் கால் நரம்பு வீக்கத்துக்கான பரிசோதனை, சிகிச்சை முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அசுத்த ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரத்த நாளங்களில் சீரான முறையில் ரத்த ஓட்டம் இருப்பதில்லை. 
இதனால், பலருக்கு கால்களில் ரத்த நாளங்கள் வீக்கமடைகின்றன. நாளைடைவில் இது சுருண்டு, வலி, அரிப்பை ஏற்படுத்தும். நிற்கும்போதும், நடக்கும்போதும் வலி அதிகமாக இருக்கும். இந்த நோயைச் சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முகாம் நடத்தப்படுகிறது. 
இதில், அதிநவீனக் கருவிகள் மூலமாக ஸ்கேன் செய்து ரத்த நாள வீக்கத்துக்கான காரணங்களைக் கண்டறிய முடியும். முகாம் காலத்தில் இந்த பாதிப்புக்கு ஸ்கேன் செய்ய 50 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த பாதிப்புக்கு ரேடியோ ஃபிரீக்வென்ஸி முறையில் எளிதாக ஒரே நாளில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப முடியும்.
 கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள வெயின் கிளினிக்கில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. இதற்காக முன்பதிவு செய்ய 7339333485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.