ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

தேசிய திறன்வழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 

தேசிய திறன்வழித் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித் தொகைபெற தகுதி பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:24 am IST

தேசிய திறன்வழித் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித் தொகைபெற தகுதி பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியரின் கூடுதல் திறன் மேம்பாட்டிற்கென மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய திறன்வழி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2017-18 ஆம்  கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன்வழி தேர்வில் கோவை மாவட்ட அளவில்  720 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 
இதில், காரமடை யை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்புப் படிக்கும்  வி.சுவேதா, ஜி.சுவாதி, சந்தியாமணிமேகலை, ஜே.கோகுல், எஸ்.பார்க்கவி,  பிரதீக், ஆர்.சாந்தினி  ஆகியோர்  தேசிய திறன்வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 
இதில்,  மாணவர் பொன்மணி கிருஷ்ணன் மாவட்ட அளவில் 3-ஆமிடம் பெற்று சாதனை படைத்தார்.
 வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்  9,10,11, 12-ஆம் வகுப்புப் படித்து முடிக்கும் வரை அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம்  கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.  
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்த ஆசிரியை ஆர்.ரேவதிக்கும் பெற்றோர்,ஆசிரியர் கழகத் தலைவர் ராம்தாஸ், தலைமையாசிரியர் பெள்ளி, ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.