தேசிய திறன்வழித் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித் தொகைபெற தகுதி பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியரின் கூடுதல் திறன் மேம்பாட்டிற்கென மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய திறன்வழி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2017-18 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன்வழி தேர்வில் கோவை மாவட்ட அளவில் 720 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், காரமடை யை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்புப் படிக்கும் வி.சுவேதா, ஜி.சுவாதி, சந்தியாமணிமேகலை, ஜே.கோகுல், எஸ்.பார்க்கவி, பிரதீக், ஆர்.சாந்தினி ஆகியோர் தேசிய திறன்வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதில், மாணவர் பொன்மணி கிருஷ்ணன் மாவட்ட அளவில் 3-ஆமிடம் பெற்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் 9,10,11, 12-ஆம் வகுப்புப் படித்து முடிக்கும் வரை அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்த ஆசிரியை ஆர்.ரேவதிக்கும் பெற்றோர்,ஆசிரியர் கழகத் தலைவர் ராம்தாஸ், தலைமையாசிரியர் பெள்ளி, ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


