6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மாலனுக்கு கண்ணதாசன் விருது அறிவிப்பு

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் 2018-ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் மாலன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:20 am

DIN

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் 2018-ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் மாலன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. 
கோவையில் உள்ள கண்ணதாசன் கழகம்,  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியன சார்பில், கண்ணதாசன் பெயரில் அவரது பிறந்த நாளான ஜூன் 24-ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும்  விருது வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருது  பிரபல எழுத்தாளர் மாலன்,  திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. விருதுடன் ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட உள்ளது. 
இந்த விருதினை படைப்பு இலக்கியத் துறையில் எழுத்தாளர்கள் அசோகமித்திரன்,  சிற்பி பாலசுப்பிரமணியம்,  வண்ணதாசன்,  ஜெயமோகன்,  கலாப்ரியா,  நாஞ்சில்நாடன்,  பிரபஞ்சன்,  எஸ்.ராமகிருஷ்ணன்,  அமுதோன் ஆகியோர் பெற்றுள்ளனர். 
அதே போல், கலைத் துறையில் பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம்,  எல்.ஆர்.ஈஸ்வரி,  டி.ஆர்.எம்.சாவித்திரி,  பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,  பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாசலம்,  முத்துலிங்கம், பதிப்பாளர் பி.ஆர்.சங்கரன்,  கவிஞர் கண்ணதாசனின்  உதவியாளர் இராம.முத்தையா ஆகியோர் பெற்றுள்ளனர் என கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் செயலாளர் மரபின்மைந்தன் முத்தையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.