எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு

கருமத்தம்பட்டி அருகே கோதைபாளையத்தில் உஜ்வலா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:19 am

DIN

கருமத்தம்பட்டி அருகே கோதைபாளையத்தில் உஜ்வலா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சூலூர் ஒன்றிய பாஜக தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.  கிளைத் தலைவர் எம்.நடராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் நடராஜ் வரவேற்றார். 
விழாவில், சிறப்பு விருந்தினராக தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு  32 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கினார்.  விழாவில் 7 பேருக்கு முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில்,  கட்சியின் கோவை வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.பி.மோகன் மந்திராசலம்,  மாவட்ட துணைத் தலைவர் எம்.கோபால்சாமி மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி,  திருப்பூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் ஆர்.எம் சுப்பிரமனியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சூலூர் ஒன்றிய இளைஞரணித் தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.