ரகசிய குட்கா ஆலை வழக்கில் 4 பேருக்கு சிறை: உரிமையாளரைப் பிடிக்க தனிப்படை அமைப்பு
சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் ரகசியமாக இயங்கிய குட்கா ஆலை போலீஸாரால் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு "சீல்' வைக்கப்பட்டது.


சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் ரகசியமாக இயங்கிய குட்கா ஆலை போலீஸாரால் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு "சீல்' வைக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அதன் உரிமையாளரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தில்லியைச் சேர்ந்த அமித் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 5,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு (குட்கா) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து மூலப்பொருள்களைக் கொண்டுவந்து இந்த குட்கா உற்பத்தி ரகசியமாக நடைபெற்றுள்ளது. வாசனைப் பாக்கு தயாரிப்பதாக உரிமம் பெற்று, முறைகேடாக இந்த ஆலை இயங்கியுள்ளது. இந்நிலையில் குட்கா தொழிற்சாலை செயல்படுவது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது சுமார் 20 டன் மூலப்பொருள்களும் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 79 பண்டல் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் இருந்து குட்கா பொருள்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
"சீல்' வைக்கப்பட்ட ஆலையின் உள்ளே 3 லட்சம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் உள்பட 1,400 கிலோ குட்கா பொருள்கள்உள்ளன.
இதனிடையே ஆலை உரிமையாளரான அமித் ஜெயின் உள்பட 5 பேர் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகையிலைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் ஆலையின் மேலாளர் ரகுராமன், வட மாநிலத் தொழிலாளர்கள்அஜய், ராம்தேவ், சோஜிராம் ஆகிய 4 பேரைக் கைது செய்த காவல் துறையினர், தில்லியில் உள்ள ஆலை உரிமையாளர் அமித் ஜெயினைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் சூலூர் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மே 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...