ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
துடியலூரையடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
துடியலூரையடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு வரவேற்றார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்நாள் விழாவுக்கு எஸ்.என்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் மும்பை மற்றும் கோவை மண்டல லார்சன் டியூப்ரோ நிறுவனத்தின் ஏவுகணைகள் மற்றும் விண்வெளிப் பிரிவு இயக்கத்தின் தலைவர் பி.ஹெச்.லட்மேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 514 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.
சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் விழாவுக்கு எஸ்.என்.ஆர்.அறக்கட்டளை துணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணா முன்னிலை வகித்தார்.
இதில், கிழக்காசிய ஜி.இ.ஹெல்த் கேர் நிறுவன விற்பனைப் பிரிவுத் தலைமை அதிகாரி ராகவேந்திரா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 523 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கல்விப் பிரிவு இயக்குநர் எபிநேசர் ஜெயகுமார், எஸ்.என்.ஆர்.அறக்கட்டளை அறங்காவலர்கள், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராமகிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

