மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஓணம் பண்டிகை, வேளாங்கண்ணி திருவிழா:  கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகை, வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு கோவை வழியாக எர்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

ஓணம் பண்டிகை, வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு கோவை வழியாக எர்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கேரளத்தில் ஓணம் பண்டிகை வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 
சென்னை-கொச்சுவேலி சிறப்பு ரயில் (வண்டி எண்-06047)  சென்னையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணி அளவில் கொச்சுவேலி சென்றடையும்.  அதே போல், மறுமார்க்கத்தில் கொச்சுவேலி-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலானது ஆகஸ்ட் 22,  28-ஆம் தேதி பிற்பகல் 12.30 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணி அளவில் சென்னை சென்றடையும். இந்த ரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
சென்னை-எர்ணாகுளம் சந்திப்பு சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்-82615 ) சென்னையில் இருந்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 
இந்த ரயிலானது காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா வழியாக எர்ணாகுளம் சென்றடையும்.  அதே போல் மறு மார்க்கத்தில் எர்ணாகுளம் சந்திப்பு-சென்னை சென்ட்ரல் (வண்டி எண்-06014) ஆகஸ்ட் 24-ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை சென்றடையும். 
இந்த ரயிலானது ஆலுவா,பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக சென்னை சென்றடையும். 
வேளாங்கண்ணி மாதா கோயில் தேவாலயத்தில் கொடியேற்றம் ஆகஸ்ட் 29 ஆம் தேதியும்,  திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதை முன்னிட்டு  எர்ணாகுளம் சந்திப்பு-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (வண்டி எண்-06016) ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 4, 7- ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 1 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு ரயில் (வண்டி எண்-06015) ஆகஸ்ட் 29, செப்டம்பர் 2, 5, 9 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.40 மணி அளவில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வேளாங்கண்ணி சென்றடையும். 
இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடையும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.