இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

29 ஆண்டுகளுக்குப் பின் சோலையாறு அணையில் இருந்து நீர் திறப்பு

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 29 ஆண்டுகளுக்குப் பின் சோலையாறு அணையில் உள்ள மூன்று மதகுகள் திறக்கப்பட்டு 9,497 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 29 ஆண்டுகளுக்குப் பின் சோலையாறு அணையில் உள்ள மூன்று மதகுகள் திறக்கப்பட்டு 9,497 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பல ஆண்டுக்குப் பின் கனமழை பெய்து வருகிறது.  தொடர் மழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால், ஜூலை 1ஆம் தேதி  நிரம்பிய சோலையாறுஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து 46 நாள்களாக  முழு கொள்ளளவிலேயே உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவிலிருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே உள்ளது. 
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அணைக்கு 14,550 கனஅடி நீர் வந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 29 ஆண்டுகளுக்குப் பின் அணையில் உள்ள மூன்று மதகுகளும் திறக்கப்பட்டு 9,497 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இதேபோல, மின் நிலையம்- 1க்கு 1,248.15 கனஅடி நீரும், மின் நிலையம்- 2க்கு 2,626.27 கனஅடி நீரும்,  சேடல்டேம் வழியாக  பரம்பிக்குளம் அணைக்கு 4,269.72 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் தற்போது 163.28 அடியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.