உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி: நிதி நிறுவனம் மீது புகார்

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 
இதுகுறித்து காவல் ஆணையர் கு.பெரியய்யாவிடம்,  தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: 
கோவை, சரவணம்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனத்துக்கு பூ மார்க்கெட்,  துடியலூர், அன்னூர், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் சார்பில் ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது. இதில் சேர்ந்து பணம் கட்டியவர்களுக்கு முதிர்வுகாலம் முடிந்தும் தொகையைத் தராமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் நிதி நிறுவனத்தின் கிளைகளும் மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். 
இந்த நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் கட்டியுள்ளோம். 100-க்கும் மேற்பட்டோர் ரூ.1.50 கோடிக்கு மேல் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். நிதி நிறுவன உரிமையாளர், அவரது மனைவி மற்றும் அந்த நிறுவனத்தில் வேலை செய்த  ஊழியர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஆகவே, உரிய விசாரணை நடத்தி எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.