துடியலூருக்கு மேற்கே உள்ள பன்னிமடை கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த ஒற்றை யானை, அங்குள்ள மளிகைக்கடையை உடைத்து உணவுப் பொருள்களை தின்றது.
மலையடிவார கிராமமான இப்பகுதியில் சமீபகாலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை பள்ளியின் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில், இங்குள்ள தர்மராஜா கோயில் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலையில் வந்த ஒற்றை யானை, அங்குள்ள வளர்மதி என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையின் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி, புளி, பருப்பு உள்ளிட்டவற்றை வெளியே இழுத்து போட்டு தின்றது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை வனப் பகுதிக்கு விரட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








