போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிங்காநல்லூர் குளத்தின் சிறப்பு குறித்து அஞ்சல் உறை, முத்திரை வெளியிடப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சிங்காநல்லூர் குளத்தின் சிறப்புக் குறித்த சிறப்பு அஞ்சல் உறை, முத்திரை ஆகியவை வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Updated On :31 டிசம்பர் 2018, 8:45 am IST

சிங்காநல்லூர் குளத்தின் சிறப்புக் குறித்த சிறப்பு அஞ்சல் உறை, முத்திரை ஆகியவை வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
 கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சிங்காநல்லூர் குளம் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது. இதையொட்டி,  இக்குளத்தில் நன்னீர் மீன்கள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
  கோவை மாநகரில் நொய்யலை ஆதாரமாகக் கொண்டு 
நகர்ப்புற சூழலில் அமைந்துள்ள சிங்காநல்லூர் குளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்ட ஆய்வில் 720 வகையான பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 200 வகையான மூலிகைச் செடிகள், 10 வகையான அழியும் தருவாயில் உள்ள பறவைகள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள நன்னீர் ஆமைகளின் வாழ்விடமாக இந்தக் குளம் காணப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் 288 ஏக்கர் பரப்பளவில் சிங்காநல்லூர் குளம் உருவாக்கப்பட்டது. கோவை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள 19 குளங்களில் வேறு எந்த குளத்திற்கும் இல்லாத அளவில் இயற்கைச் சூழல், பசுமைப் பரப்பு, பல்லுயிர் செழுமை, கலாசார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் போன்றவை சிங்காநல்லூர் குளத்திற்கு உள்ளது.
  சிங்காநல்லூர் குளம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலம் ஆக அறிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி மாநகராட்சி, இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து சிங்காநல்லூர் குளத்தின் முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு அஞ்சல் முத்திரை வெளியிடப்படும். கடந்த ஜனவரி மாதம் முதல் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பற்றிய கல்வி இக்குளத்தில் வைத்து கற்றுத்தரப்பட்டு வருகிறது. இம்மாணவர்களுக்கு இயற்கை பற்றிய குறும்படங்கள் திரையிட்டு காட்ட இயற்கை மற்றும் பறவைகள் விளக்கக் கூடம், நகர்ப்புற இயற்கை விளக்கம் மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்.  சிங்காநல்லூர் குளத்தின் உயிர் பன்மை சூழலை பாதுகாக்கும் நோக்கில் வரும் டிசம்பர் மாதத்தோடு மீன் பிடிப்பது தடை செய்யப்படவுள்ளது. நமது பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் அழிந்து வரக்கூடிய நாட்டு வகை நன்னீர் மீன்களை இயற்கைச் சூழலில் பாதுகாத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் கோவை நன்னீர் மீன்கள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்படுகிறது என்றார்.
 ஆட்சியர் த.ந.ஹரிஹரன், பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.