சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெண்ணிடம் 10 பவுன் நகைப் பறிப்பு

கோவை, சரவணம்பட்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் புதன்கிழமை பறித்துச் சென்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:53 am

DIN

கோவை, சரவணம்பட்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் புதன்கிழமை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: 
சரவணம்பட்டியை அடுத்த பூசாரிபாளையத்தைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (53). இவர் அதே பகுதியில் உள்ள கடைக்குப் புதன்கிழமை பிற்பகல் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.