கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதை ரூ. 83 கோடியில் நவீனப்படுத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதைத் தளம் ரூ. 83 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Updated On :23 ஜூலை 2018, 7:39 am IST

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதைத் தளம் ரூ. 83 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கோவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, கோவை-  ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரடி ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகரில் புதிய சாலைகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத் திடல், தெருவிளக்குகள், சாலையோர நடைபாதைகள் என பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் தூர்வாரப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழை காரணமாக அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன. 
கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையை தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், இதை ரூ. 83 கோடி செலவில் மாதிரி சாலையாக நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். 
இதில் நடைபாதையை அகலப்படுத்துதல், வெளிப்புற நடைபாதை, மிதிவண்டி சாலை, நவீன கழிப்பறைகள், ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி உடற்பயிற்சிக் கூடங்கள், பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நிலையம், குழந்தைகள் விளையாடுவதற்கென சிறுவர்பூங்கா, பொழுதுபோக்கு அரங்கு, தொலைபேசி, மின்கம்பிகளை பூமிக்கடியில் பதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும்,  மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் சாலையோரங்களில் அமைக்கப்பட உள்ளன. முக்கிய சாலை சந்திப்புகளில் விபத்தைத் தடுக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் மாநகராட்சி பகுதிகளைக் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. வாகன நிறுத்துமிடங்களும் ஒழுங்குபடுத்தப்படும். விரைவில் இந்தப் பணிகள் தொடங்கும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.