மதுக்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுக்கரை அருகேயுள்ள மலுமிச்சம்பட்டி, எஸ்.ஐ நகரில் வசிப்பவர் கோமதிநாயகம் (60). இவர், தனது மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு சனிக்கிழமை மாலை வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செய்தியாளர்களைச் சந்தித்துதான் ஆட்சி நடத்த வேண்டுமா? அமைச்சர் நிர்மல் குமார்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள்?






