ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஒழுக்கத்தை போதிக்காமல் செயலில் காட்ட வேண்டும்: குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பதற்குப் பதிலாக, பெற்றோர் ஒழுக்கமாக நடந்து காட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறியுள்ளார்.

Updated On :23 ஜூலை 2018, 7:42 am IST

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பதற்குப் பதிலாக, பெற்றோர் ஒழுக்கமாக நடந்து காட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறியுள்ளார்.
குழந்தை வளர்ப்பில் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் குறித்தும், குழந்தைகளைக் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் "எப்படித்தான் வளர்ப்பதோ?' என்ற நிகழ்ச்சி கோவை ஸ்ரீ  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
இதில், 7 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கான இரண்டாவது வார நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் அரங்கில் நடைபெற்றது. 
இதில் பங்கேற்று பிருந்தா ஜெயராமன் பேசியதாவது:  பிள்ளைகளுக்குப்  பெற்றோர்களே கண்கண்ட முதல் உதாரணம். பிள்ளைகளின் எதிரில் பொய் பேசுவது, மறைத்துப் பேசுவது, புறம்பேசுவது, சப்தமாகப் பேசுவது,  அடிப்பது போன்ற செயல்களை பெற்றோர்கள் செய்தால் பிள்ளைகளும் அதையே பிரதிபலிப்பார்கள். பிள்ளைகள் மேம்பட்டவர்களாகவும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் எதிரில் பொய் பேசாமல், மறைக்காமல், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு. அப்போதுதான் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் நாம் வெற்றியடைய முடியும்.  பிள்ளைகள் செய்யும் சிறிய தவறுகளுக்கு தண்டனைகள் கொடுப்பது, அடிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அன்பினாலும், பொறுமையினாலும் மட்டுமே அவர்களை நல்வழிக்கு மாற்ற முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.