அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

குட்கா ஆலை மேலாளர் உள்பட  5 பேருக்கு காவல் நீட்டிப்பு

சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் போதைப் பாக்கு (குட்கா ஆலை) தொழிற்சாலை கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்ட வழக்கில்

Updated On :26 ஜூன் 2018, 7:18 am IST

சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் போதைப் பாக்கு (குட்கா ஆலை) தொழிற்சாலை கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்ட வழக்கில் கைதான ஆலை மேலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்றக் காவல் ஜூலை 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கண்ணம்பாளையம் கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையை போலீஸார் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கண்டறிந்து, அதற்கு சீல் வைத்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக ஆலை மேலாளர் ரகுநாதன் உள்பட அங்கு பணிபுரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கான நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் 5 பேரும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
சூலூர் குற்றவியல் நீதிபதி வேடியப்பன் இவர்கள் 5 பேருக்கும் ஜூலை 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 5 பேரும் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.