"தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்'
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) முன்னாள் தேசியத் தலைவரான மருத்துவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.


தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) முன்னாள் தேசியத் தலைவரான மருத்துவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் "பாரத் யாத்ரா' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐஎம்ஏவின் பிரதிநிதிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, கோவை வந்த இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் விஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தல் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது. மசோதா நிறைவேற்றப்பட்டால் மருத்துவர்கள் அல்லாத நபர்களே உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
இதனால், ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறாது. மேலும், மாநில உரிமைகள் பறிக்கப்படும். தகுதித் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். எனவே, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்திய மருத்து சங்கம் சார்பில் நாடு முழுவதும் விழிப்புனர்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.
இதன் ஒருபகுதியாக மார்ச் 25-ஆம் தேதி தில்லியில் நடக்கும் மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து ஐஎம்ஏ பிரதிநிதிகளாக உள்ள மருத்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்ற உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வந்த தமிழக மாணவர்கள்
உயிரிழந்தது வருத்தத்துக்குரியது. மாணவர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உயிரிழந்துள்ளனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது தவறு.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை சார்பில் மாணவர்கள் உயிரிழப்பில் உள்ள உண்மை தன்மையைக் கண்டறிய மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசிய துணைத் தலைவரும், இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான மருத்துவர் எல்.பி.தங்கவேலு, கோவை கிளைச் செயலாளரான மருத்துவர் ராஜேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...