தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட உள்ள 52 பேட்டரி வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக ரூ. 10.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக மாநகராட்சி வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று தரம் பிரிக்கப்பட்ட திடக் கழிவுகளை சேகரிக்க ரூ. 93.60 லட்சம் மதிப்பில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 52 வாகனங்களை வாங்கப்பட்டன.
இந்த வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கிவைத்து பேசியதாவது:
சாதாரண தள்ளு வண்டியில் ஒரு நாளைக்கு 150 வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க முடியும். இந்த பேட்டரி வாகனம் மூலம் 500 வீடுகளுக்குச் சென்று திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன்,
துணை ஆணையர் ப.காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

