திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேன் - ஆட்டோ மோதல்: 7 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே வேன் - ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :14 மே 2018, 10:25 pm

DIN

பொள்ளாச்சி அருகே வேன் - ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர், வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர், தனது உறவினர்களுடன் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வேனில் சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, மீண்டும் ஆனைமலையில் இருந்து திருப்பூருக்கு பொள்ளாச்சி வழியாக சென்றுகொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி - ஆனைமலை சாலையில், நஞ்சேகவுண்டன்புதூர் அருகே மாலை 4.30 மணி அளவில் அவர்களது வேன் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆட்டோவும், வேனும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், வேனில் பயணம் செய்த ராஜேஷ் (33), அவரது மனைவி ஜீவா (32), அங்கமுத்து (34), அவரது மனைவி அனிதா வின்னரசி (32), அங்கமுத்துவின் இரண்டரை மாதப் பெண் குழந்தை, மோனிகா(25), விமலா (26) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.