மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பெண் கொலை வழக்கில்  ஸ்ரீரங்கம் கார் ஓட்டுநர் கைது

கோவை அருகே பெண்ணைக் கொலை செய்து சாக்கடையில் வீசியது தொடர்பாக கார் ஓட்டுநரை ராமநாதபுரம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 9:01 pm

கோவை அருகே பெண்ணைக் கொலை செய்து சாக்கடையில் வீசியது தொடர்பாக கார் ஓட்டுநரை ராமநாதபுரம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவை, ராமநாதபுரம் ராமலிங்கஜோதி நகரில் வசித்து வருபவர் சிவகுமார். இவரது மனைவி ஜெயந்தி (35). இவர் கடந்த மே 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் பிளேக் மாரியம்மன் கோயில் அருகே உள்ள சாக்கடையில் கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கு மூட்டையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் கைப்பற்றப்பட்ட சடலம், காணாமல் போன சிவகுமாரின் மனைவி ஜெயந்தி என்பது தெரியவந்தது. மேலும், அவரது செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு நடத்திய விசாரணையில், நஞ்சுண்டாபுரம் எஸ்.என்.வி.கார்டனில் உள்ள அரசியல் பிரமுகரின் உறவினர் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மணிவேல் (31) என்பவர் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மணிவேல் வேலை செய்த வீட்டில் ஜெயந்தியும் வீட்டு வேலை செய்துவந்தார்.
இந்த நிலையில், மே 17-ஆம் தேதி மணிவேல் மட்டும் வீட்டில் இருந்தபோது அவர் வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவரை கழுத்தை இறுக்கிக் கொலை செய்து 4 பவுன் தாலி சங்கிலி, கம்மல் ஆகியவற்றைத் திருடியுள்ளார்.
இதன்பிறகு அங்கிருந்து சென்ற அவர் மே 18-ஆம் தேதி அதிகாலை மீண்டும் வந்துள்ளார். பின்னர் ஜெயந்தியின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து சிங்காநல்லூர் பிளேக் மாரியம்மன் கோயில் அருகே உள்ள சாக்கடையில் வீசிச் சென்றுள்ளார். தனது கடனை அடைக்கவே ஜெயந்தியைக் கொலை செய்ததாக போலீஸாரிடம் மணிவேல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, மணிவேலை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.