ரயில் இ - டிக்கெட் மோசடி செய்ததாக பொள்ளாச்சியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை பாலக்காடு ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் சிலர் போலியான அடையாள அட்டை தயாரித்து ரயில் இ - டிக்கட்டுகளைப் பெற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மேத்யூசெபஸ்டியன் தலைமையிலான ரயில்வே காவல் துறையினர் பொள்ளாச்சியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் நவம்பர் 2ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இதில், பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் போலியாக பல வாடிக்கையாளர் அடையாள அட்டைகளைத் தயாரித்து டிக்கட் பெற்று, அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ரூ. 23 ஆயிரத்து 900 மதிப்பிலான 11 டிக்கட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(56) என்பவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


