கோவில்பாளையம், கவையன்புதூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்லியல் கருத்துரை மற்றும் குழந்தைகள் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பாளையம் விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் நடராசன் அனைவரையும் வரவேற்றார்.
தொல்லியல் துறை கருத்துறையில் ந.கணேசன் பேசியதாவது: மண்பானையின் 2000 ஆண்டு கால வரலாறும், மனிதர்கள் அடக்கம் செய்த முறைகள் குறித்தும் விளக்கினார். இந்நிகழ்சியில் முன்னிலை உரையாற்றிய கல்லூரித் தாளாளர் வே.குழந்தைசாமி பேசும்போது அனைத்து இடங்களிலும் தமிழிலேயே பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும், தமிழிலேயே பேச வேண்டும், தமிழ் உணர்வு குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார். மேலும் பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். தொடர்ந்து மாணவர்களுக்கு இலக்கியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சதாசிவம், கந்தசாமி, உதவிப்பேராசிரியர் கணேசன், கவிஞர் பெ.தருமலிங்கம், என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி முதல்வர் ராமசாமி, மருத்துவர் தாமரைச்செல்வன், மருதாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கவையன்புதூர் தனிச்சங்க நிர்வாகிகள் ந.கணேசன், தாமோதரசாமி, கதிர்வேல், ரத்தினசாமி, கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

